சேலம், ஜூலை 7: சேலம் மாநகரில் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி நேற்று முன்தினம் மாலை கோரிமேடு பகுதியில் கஞ்சா புழக்கம் இருந்து வருவதாக தகவல் வெளியானது. இதனையடுத்து எஸ்ஐ துர்காதேவி மற்றும் போலீசார், அப்பகுதியில் சோதனையிட்டனர். அப்போது, கோரிமேடு வேலைவாய்ப்பு அலுவலகம் அருகே வாலிபர் ஒருவர் கஞ்சா வைத்திருந்தார். அவரை பிடித்து விசாரித்ததில் கோரிமேடு ஜல்லிக்காடு பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் (27) என்பது தெரியவந்தது. இதனையடுத்து, அவரை கைது செய்த போலீசார், கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது
37
previous post