வருசநாடு, ஆக. 6: வருசநாடு போலீசார் நேற்று முன் தினம் சிங்கராஜபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சிங்கராஜபுரம் மூலவைகை ஆற்று பாலம் அருகே சந்தேகப்படும்படியாக நின்றிருந்த 3 பேரை போலீசார் பிடிக்க முற்பட்டனர். அப்போது அங்கிருந்த 2 பேர் தப்பி ஓடினர். மற்றொருவரை போலீசார் மடக்கி பிடித்து அவரிடம் சோதனை மேற்கொண்டனர். அதில் அவரிடம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது. விசாரணையில், அவர் வருசநாடு பகுதியைச் சேர்ந்த சூர்யா(22) என்பதும், தப்பி ஓடியவர்கள் அதே கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ்(34), அழகேசன்(32) என்பதும் தெரியவந்தது. மேலும் இவர்கள் கேரளா மாநிலம் குமுளியில் இருந்து கஞ்சா வாங்கி வந்து அதனை சிறுவர்களுக்கு விற்பனை செய்து வந்ததும் போலீசாருக்கு தெரிய வந்தது. இதையடுத்து சூர்யாவை கைது செய்த போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.