கோவை, அக். 15: கோவை அருகே கஞ்சா விற்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர். கோவை ஆர்.எஸ்.புரம் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சிரியன் சர்ச் ரோட்டில் உள்ள பொதுக்கழிப்பிடம் அருகே சந்தேகம்படும் படி நின்றிருந்த வாலிபர் ஒருவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். இதில், அவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்த ஓட்டல் ஊழியர் அஸ்வின் (21) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 1.150 கி.கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல், வடவள்ளி போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்ற போது, தனியார் அப்பார்ட்மெண்ட் அருகே சந்தேகம்படும்படி சுற்றி கொண்டிருந்த 3 பேர் கும்பலை பிடித்து விசாரித்தனர். அதில், அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். சோதனை செய்ததில் அவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வடவள்ளியை சேர்ந்த விக்னேஷ் (22), டிரைவர் சூர்யா (20), கூலி தொழிலாளி அஜித்குமார் (20) ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1.150 கி.கிராம் கஞ்சா, ஒரு ஸ்கூட்டர் மற்றும் ஒரு கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர், 3 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.