ஈரோடு, ஜூன் 16: பெருந்துறை அடுத்துள்ள தாய் நகர் ஆண்கள் விடுதி பின்புறம் கஞ்சா விற்பனை நடை பெறுவதாக பெருந்துறை போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் அப்பகுதியில் சோதனை நடத்தியதில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த தாய் நகரை சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் நவீண்குமார் (24), விஜயமங்கலம், சங்கு நகரை சேர்ந்த தங்கதுரை மகன் தனபால் (26), ஆகிய இருவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதேபோல, கோபி போலீசார் நடத்திய ரெய்டில் கோபி, மாதேஸ்வரன் கோயில் வீதியை சேர்ந்த வெங்கடாச்சலம் மகன் கீர்த்திவாசன் (22), என்பவரை கைது செய்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
கஞ்சா விற்ற 3 பேர் கைது
59