திருச்சி, ஆக.20: திருச்சியில் கஞ்சா விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். திருச்சி கே.கே. நகர் ஐயப்ப நகர் அமராவதிதெரு ரயில் தண்டவாளம் பகுதியில் கஞ்சா விற்ற காட்டூரை சேர்ந்த விஜய் (28), அய்யன்புத்தூர் ஈஸ்வரன் நகரை சேர்ந்த பிரவின்குமார்(22) ஆகியோரை கைது செய்த கே.கே. நகர் போலீசார், அவர்களிடமிருந்து 2.06 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மற்றொரு சம்பவம்: திருச்சி காஜாப்பேட்டையில் கஞ்சா விற்ற காஜாப்பேட்டை வீரன் கோயில் தெருவை சேர்ந்த சுரேஷ்குமார்(21) என்பவரை பாலக்கரை போலீசார் கைது செய்து 80 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.