திருச்சி, ஆக.19: திருச்சி சஞ்சீவி நகர் பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த 4 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்களிடம் ₹20 ஆயிரம் மதிப்புள்ள 2 கிலோ கஞ்சா ஆட்டோவில் வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.இதனையடுத்து கஞ்சா விற்றதாக சங்கிலியாண்டபுரம் எம்.ஜி.ஆர் நகர் பகுதியைச் சேர்ந்த தேவி (43), சங்கிலியாண்டபுரம் ராமமூர்த்தி நகர் பகுதியைச் சேர்ந்த மைக்கேல் சாமி (19), திருவெறும்பூர் பகுதியை சேர்ந்த தமிழரசன் (24), ஆகியோரை கைது செய்து, அவர்களிடம் இருந்த 2 கிலோ கஞ்சா மற்றும் ஒரு ஆட்டோவை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பியோடிய சோபியாவை மதுவிலக்கு போலீசார் தேடி வருகின்றனர்.