ஈரோடு, மே 27: ஈரோடு மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் தொடர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதில், கோபி போலீசார் பாரியூர் சாலையில் நேற்று முன்தினம் ரோந்து சென்றபோது, பாலத்து கருப்பராயன் கோயில் பகுதியில் கஞ்சா விற்றதாக கோபி படையாச்சி மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த 19 வயது வாலிபரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். இதேபோல், பாரியூர் சாலை பதி பஸ் ஸ்டாப் பகுதியில் கஞ்சா விற்றதாக கோபி பி.நஞ்சகவுண்டன்பாளையம் சின்னசாமி வீதியை சேர்ந்த தங்கவேல் மகன் திவாகர் (25) என்பவரை கைது செய்து, 100 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.