ஈரோடு, ஆக.4: ஈரோடு மாவட்டம் பர்கூர் போலீசார் ஓசூர் பகுதியில் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது, ஓசூர் பொதுக்கிணறு அருகே ஓடைப்பள்ளத்தில் சந்தேகப்படும்படியாக நின்றிருந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில், அவர்கள் பர்கூர் தாமுரெட்டி மாம்பள்ளத்தை சேர்ந்த முருகன் (42), அதேபகுதி கரைப்பாளையத்தை சேர்ந்த ஜவராயன் (56) ஆகியோர் என்பது தெரியவந்தது. அவர்களது உடமைகளை சோதனை செய்தபோது அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருளான கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்வதற்காக மறைத்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 830 கிராம் கஞ்சா பொட்டலங்கள், ரூ.3,910 ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.