தர்மபுரி, செப்.6: தர்மபுரி மதுவிலக்கு போலீசார் ரோந்து சென்றபோது, அதியமான்கோட்டை ஏமகுட்டியூர் ஏரி அருகில் சந்தேகப்படும்படி நின்ற 2பேரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர்கள் வெங்கட்டம்பட்டி பகுதியை சேர்ந்த சின்ராஜ்(45), சவுளூர் கொட்டாய் உங்காரனஅள்ளியை சேர்ந்த சரவணன் என்பதும், இருவரும் கஞ்சா வைத்து விற்பனை செய்து வந்ததும் தெரிந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து ₹1000 மதிப்பிலான 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.