தேனி, ஜூன் 26: பெரியகுளம் நகர், கம்பம் ரோட்டில் உள்ள பள்ளி அருகே தென்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கர்ணன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக டூவீலரில் நின்றிருந்த பெரியகுளம் நகர் தென்கரை கிருஷ்ணன் கோயில் தெருவை சேர்ந்த பாலாஜி(20), முத்துராஜா தெருவை சேர்ந்த பிரேம்குமார்(18) ஆகியோரை போலீசார் சோதனை செய்தனர். அவர்களிடம் கஞ்சா இருந்தது. விசாரணையில், கஞ்சாவை தென்கரை முத்துராஜா தெருவை சேர்ந்த ஆகாஷ்(24) என்பவர் மூலம் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து பாலாஜி, பிரேம்குமாரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஆகாஷை தேடிவருகின்றனர்.