சேலம், ஜூன் 7: ேசலம் வீராணம் இன்ஸ்பெக்டர் சங்கீதா மற்றும் போலீசாருக்கு கிடைத்த தகவலின்பேரில் அல்லிக்குட்டை சுடுகாடு பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு சந்தேகப்படும் படியாக இருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் கஞ்சா விற்பனை செய்வது தெரியவந்தது. அவர்கள் வாய்க்கால் பட்டறையை சேர்ந்த கோகுல்(23), கிரி(24) என்பது தெரியவந்தது. இவர்களிடமிருந்து 5 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் மீது நாமக்கல்லில் அடிதடி, திருட்டு உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளது. இருவரையும் ேபாலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கஞ்சா விற்ற 2 பேர் கைது
0
previous post