திருச்சி, மே 27: திருச்சி பொன்மலை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பள்ளி அருகே கஞ்சா விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, கடந்த 25ம் தேதி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்போது, அங்கு கஞ்சா விற்ற புதுக்கோட்டையை சேர்ந்த முருகானந்தம் (20) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 100 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
இதைப்போல், சங்கிலியாண்டபுரம் பகுதியில் உள்ள டீக்கடை அருகே கஞ்சா விற்ற அதே பகுதியை சேர்ந்த ஞானசேகர்(35) என்பவரை பாலக்கரை போலீசார் கைது செய்தனர். அவாிடமிருந்து 1.25 கிலோ கஞ்சா, டூவீலர், வாள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.