சேலம், ஆக.6: சேலம் லைன்ேமடு புதுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் வேலு(38). இவர் நேற்று அன்னதானப்பட்டி அல்லிக்குட்டை காலனி பகுதியில் நடந்து சென்றுள்ளார். அப்பகுதியில் தடைசெய்யப்பட்ட கஞ்சாவை வாலிபர்கள் குழந்தைகளுக்கு விற்பனை செய்வதை பார்த்து தட்டிக்ேகட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர்கள், வேலுவிற்கு மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து வேலு அன்னாதானப்பட்டி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த ேபாலீசார், அல்லிக்குட்டை காலனி பகுதியைச் சேர்ந்த சுரேஸ்(30), அரிசிபாளையத்தைச் சேர்ந்த தனுஷ் பிரபு(21) ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்த கஞ்சா பாக்கெட்டுகள், 2 செல்போன்கள், இருசக்கர வாகனம் மற்றும் 9 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும், தப்பியோடிய நெத்திமேடு பகுதியைச் சேர்ந்த ராஜவேல் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
கஞ்சா விற்ற 2பேர் கைது
previous post