சேலம், ஜூன் 25: சேலம் அம்மாபேட்டை காவல்நிலைய எஸ்ஐ புவனேஸ்வரி மற்றும் போலீசார் குமரன்தெருவில் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும்படி நின்ற வாலிபரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர் ரெட்டியூர் பகுதியை சேர்ந்த யுவராஜ் (23) என்பதும், கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்வதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 5 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதேபோல் குமரன் தெரு 2ல் ரோந்து சென்றபோது அங்கு கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்த கோகுலகிருஷ்ணன்(25) என்பவரை பிடித்து அவரிடமிருந்து 5கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
கஞ்சா விற்ற 2பேர் கைது
0