கிருஷ்ணகிரி, செப்.9: கிருஷ்ணகிரி கலால் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிரிஜா தலைமையில் போலீசார், கிருஷ்ணகிரி அருகே செட்டிப்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள மசூதி அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவர் அதே பகுதியை சேர்ந்த காந்தி (37) என்பதும், கஞ்சாவை விற்க முயன்றதும் தெரியவந்தது. இதனையடுத்து, அவரை போலீசார் கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.