மதுரை, ஜூன் 23: மதுரையில் கஞ்சா விற்பனை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மதுரை, அண்ணாநகர் பகுதியில் மாட்டுத்தாவணி போலீஸ் சிறப்பு எஸ்ஐக்கள் பாக்கியம், நாகராஜன் மற்றும் ஏட்டு ராஜாராம் ஆகியோர் ரோந்து சென்றனர். அப்போது அவர்களை கண்டவுடன் தப்பிச்செல்ல முயன்ற வாலிபர் ஒருவரை விரட்டிச்சென்று மடக்கிப்பிடித்தனர். விசாரணையில் அவர் மதுரை, கீரைத்துறையை சேர்ந்த வசந்தகுமார்(25) என்பது தெரியவந்தது.
மேலும், ஏற்கனவே இவர் சில குற்ற வழக்குகளில் கைதாகி சிறையில் இருந்தபோது, மதுரை தத்தனேரியைச் சேர்ந்த ஆதிராஜா, செல்லூரைச் சேர்ந்த வினோத், திண்டுக்கல்லைச் சேர்ந்த ரமணா ஆகியோரின் நட்பு கிடைத்துள்ளது. சிறையிலிருந்து ஜாமீனில் வந்தபின் அவர்களுடன் சேர்ந்து ஆந்திரா, ஒடிசா மாநிலங்களில் இருந்து கஞ்சா வாங்கி வந்து மதுரை உள்ளிட்ட பகுதியில் விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் வசந்தகுமாரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 கிலோ கஞ்சா மற்றும் ரூ.2 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.