சேந்தமங்கலம், ஜூலை 2: நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அடுத்த பச்சுடையாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் தர்மேந்திரன் (49). லாரி டிரைவரான இவர், லாரிக்கு சென்று விட்டு வீடு திரும்பும் போது, வெளி மாநிலத்தில் இருந்து கஞ்சா வாங்கி வந்து விற்பனை செய்து வருவதாக, சேந்தமங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் எஸ்ஐ தமிழ்குமரன் மற்றும் போலீசார், தர்மேந்திரன் வீட்டில் நேற்று சோதனையிட்ட போது, அங்கு 50 கிராம் கஞ்சா பொட்டலம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கஞ்சா விற்ற லாரி டிரைவர் கைது
0