கோவை, ஜூலை 29: கோவை வெரைட்டிஹால் ரோடு போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது ஆர்ஜி தெருவில் உள்ள ஜெயின் கோயில் அருகே வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரை சந்தேகத்தின் பேரில், போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ரஞ்சித் வைஷ்ணவ் (27) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.