தேவாரம், ஜூலை 22: தேவாரம் சின்ன தேவியம்மன் கண்மாய் பகுதியில் தேவாரம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்பகுதியில் ஒரு பெண் உட்பட 3 பேர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட தெரியவந்தது. விசாரணையில், தேவாரம் பேச்சியம்மன் கோயில் தெரு சசிகுமார் (37), ராமர் சுஹேந்திரன் (32), தேவாரம் வடக்கு தெரு முருகன் மனைவி கவிதா ஆகிய மூவரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் இவர்களிடமிருந்து விற்பனை செய்வதற்காக வைத்திருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். தேவாரம் போலீசார் 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து, சசிக்குமார், சுகேந்திரனை கைது செய்து விசாரிக்கின்றனர்.