திருவில்லிபுத்தூர், செப்.14: திருவில்லிபுத்தூர் கிருஷ்ணன்கோவில் அருகே உள்ள விழுப்பனூர் பகுதியில் கஞ்சா விற்பதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கிருஷ்ணன்கோவில் சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன் சம்பவ இடத்திற்கு சென்றார். அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த இரண்டு பேரை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த காசியம்மாள்(55), தெய்வேந்திரன்(43) என தெரியவந்தது. அவர்களிடம் இருந்து கஞ்சா பொட்டலங்கள், ரூ.4,950 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இருவரையும் கிருஷ்ணன் கோவில் போலீசார் கைது செய்தனர்.