ராசிபுரம், பிப்.18: ராசிபுரம் கோனேரிப்பட்டி பகுதியில் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில், போலீசார் நேற்று அப்பகுதியில் சோதனையிட்டனர். போலீசாரை பார்த்ததும், தப்பியோடிய வாலிபரை மடக்கி பிடித்தனர். விசாரணையில், அவர் ராசிபுரம் அடுத்த கட்டனாச்சினம்பட்டி யாதவர் தெருவை சேர்ந்த சோப்ராஜ் (31) என்பதும், அப்பகுதியில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வருவதும் தெரிந்தது. டீ கடைக்கு போகும் நேரம் தவிர, மீதி நேரம் ராசிபுரம் பகுதியில் கஞ்சா விற்று வந்துள்ளார். அவரிடம் இருந்த ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, சோப்ராஜை கைது செய்தனர்.
கஞ்சா விற்ற டீ மாஸ்டர் கைது
0
previous post