மதுரை, ஜூலை 8: மதுரை தத்தனேரி பகுதியில் உள்ள மேம்பாலம் அருகே கஞ்சா விற்பனை செய்வதாக செல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் அப்பகுதியில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, தத்தனேரி பாரதிநகரைச் சேர்ந்த ஸ்டாலின்(42) என்பவர், அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்வது உறுதியானது. இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர். அவரிடமிருந்து 1.300 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.