மணிகண்டம், நவ.21: ரங்கம் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் கஞ்சா விற்பனை நடப்பதாக ராம்ஜி நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ராம்ஜி நகர் மலம்பட்டியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (43) என்பவர் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்ததையடுத்து அவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 60 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
கஞ்சா விற்றவர் கைது
0
previous post