Thursday, June 20, 2024
Home » கஞ்சா விற்பனை 2 வாலிபர்கள் கைது

கஞ்சா விற்பனை 2 வாலிபர்கள் கைது

by Karthik Yash

தர்மபுரி, ஜூன் 9:பென்னாகரம் போலீஸ் எஸ்ஐ கருணாநிதி மற்றும் போலீசார், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, போடூர் காலனி தண்ணீர் டேங்க் அருகே, வீட்டில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்த மொட்டன் மகன் மல்லேஸ்(28) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து ₹300 மதிப்புள்ள 100 கிராம் கஞ்சாவை, போலீசார் பறிமுதல் செய்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல், தர்மபுரி டவுன் போலீஸ் எஸ்ஐ சேகர் மற்றும் போலீசார், ரோந்து பணி ஈடுபட்டிருந்தபோது, ராமாக்காள் ஏரி அருகே கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த பழைய தர்மபுரியை சேர்ந்த மகாலிங்கம் மகன் சக்தி(27) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ₹1000 மதிப்புள்ள 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

twenty − eight =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi