அவிநாசி, ஜூலை 5: குன்னத்தூர் கருங்கல்மேடு டாஸ்மாக் கடை அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக திருப்பூர் மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அப்பகுதிக்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு கையில் பிளாஸ்டிக் பையுடன் நின்றிருந்த ஒரு நபரைப் பிடித்து விசாரித்தபோது விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர், பீகார் மாநிலத்தை ரோஷன்குமார் (22) என்பதும், திருப்பூர் தமிழ்நாடு தியேட்டர் பின்புறம் வசித்து வருவதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அவரிடமிருந்த ஒரு கிலோ 200 கிராம் கஞ்சாவை கைப்பற்றினர். பின்னர் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, திருப்பூர் மாவட்ட சிறையில் அடைத்தனர்.