வேலூர், செப்.6: குடியாத்தம் பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்த 3 வாலிபர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் சுப்புலட்சுமி உத்தரவிட்டார். வேலூர் மாவட்டத்தில் குற்றங்களை தடுக்க, தொடர் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க எஸ்பி மதிவாணன் பரிந்துரையின் பேரில் கலெக்டர் சுப்புலட்சுமி தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வரும் எதிரிகள் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் பரதராமி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த குடியாத்தம் பகுதியசை் சேர்ந்த ஜெகதீசன் (23) என்பவரும், குடியாத்தம் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த பிரசாந் (20), மனேஜ்குமார்(22), ஆகிய 3 பேரை கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்து சேலம் சிறையில் போலீசார் அடைத்தனர். இந்நிலையில் தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்து வருவதால் அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அடைக்க எஸ்பி மதிவாணன், கலெக்டர் சுப்புலட்சுமிக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் 3 பேரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க கலெக்டர் சுப்புலட்சுமி நேற்று உத்தரவிட்டார். அதற்கான நகலை சிறையில் உள்ள 3 பேரிடம் அந்தந்த காவல் நிலைய போலீசார் ஒப்படைத்தனர்.