சேலம், நவ.23: சேலம் சீலநாய்க்கன்பட்டி வேலுநகர் 2வது தெருவைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மகன் சபரி காளிமுத்து (26). இவர் நேற்று முன்தினம், அன்னதானப்பட்டி பகுதியில் நடந்து சென்றார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த போஸ் என்கிற ரவிக்குமார் (24), மணிரத்தினம் (22), கார்த்தி ஆகியோர் சேர்ந்து தடை செய்யப்பட்ட கஞ்சாவை விற்பனை செய்துள்ளனர். இதுகுறித்து அவர்களிடம் காளிமுத்து தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர்கள், காளிமுத்துவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து காளிமுத்து அன்னதானப்பட்டி ேபாலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கஞ்சா விற்பனையை தட்டிக் கேட்டதால் வாலிபர் மீது தாக்குதல்
0
previous post