விழுப்புரம்: விழுப்புரம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 வாலிபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். விழுப்புரம் அருகே கெங்கராம்பாளையம் மேம்பாலம் அருகே கஞ்சா விற்பதாக வந்த புகாரின் பேரில் வளவனூர் காவல் நிலைய போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில்ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறவே அவர்களை சோதனை செய்தனர்.
அப்போது அவர்களிடம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து விசாரணையில், குமாரகுப்பம் திவான் (20), வளவனூர் ஐஸ்வர் (21), அற்பிசம்பாளையம் ராஜ்குமார் (22) என்பதும் இவர்கள் அப்பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. மேலும் சென்னை மாதவரத்தை சேர்ந்த எத்திராஜ் தப்பியோடியதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து திவான், ஐஸ்வர், ராஜ்குமார் ஆகிய 3 பேரையும் கைது செய்த போலீசார் அவரிடமிருந்து கஞ்சா பொட்டலங்கள், இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். தப்பியோடிய எத்திராஜை தேடி வருகின்றனர்.