கன்னியாகுமரி, பிப்.16: குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே வடிவீஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் பிரகதீஷ் வேலப்பன். இவர் திருவனந்தபுரத்தில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து குமரி மாவட்டம் முழுவதும் விற்பனை செய்து வருவதாக மாவட்ட போதை தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து கஞ்சாவை கடத்தி வந்த பிரகதீஷ் வேலப்பனை நாகர்கோவில் பகுதியில் வைத்து போலீசார் மடக்கி பிடித்தனர். அவரிடம் சோதனை செய்ததில் விற்பனைக்காக இரண்டு கிலோ கஞ்சா வைத்து இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து பிரகதீஷ் வேலப்பனை கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அவரிடம் விசாரனை நடத்தி வருகிறார்கள்.
கஞ்சா வியாபாரி கைது
0