சிவகாசி, மே 20: சிவகாசி அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார். சிவகாசி அண்ணா காய்கறி மார்க்கெட் பகுதியில் டவுன் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனை செய்த அறிஞர் அண்ணா காலனியை சேர்ந்த முகமதுரஷித்கான் (22) என்ற வாலிபரை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக முருகேசன் என்பவரை தேடி வருகிறார்கள்.
கஞ்சா வியாபாரி கைது
0