வருசநாடு, ஜூன் 26: வருசநாடு அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக வந்த தகவலை தொடர்ந்து போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வருசநாடு – முருக்கோடை சாலையில், மொட்டப்பாறை அருகே சந்தேகப்படும்படியாக நின்றிருந்த இருவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், இருவரும் தர்மராஜபுரத்தைச் சேர்ந்த சிலம்பரசன் (35), சிங்கராஜபுரத்தைச் சேர்ந்த தோகை என்பது தெரிய வந்தது. மேலும் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து இருவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 38 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.