தர்மபுரி, ஆக. 28: பாலக்கோடு தக்காளி மார்க்கெட் அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக தர்மபுரி மதுவிலக்கு அமர்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், எஸ்ஐ கோபி தலைமையிலான போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்றனர். அங்கு, சந்தேகப்படும்படியாக நின்ற 2 வாலிபர்களை மடக்கி பிடித்து சோதனையிட்டனர். இதில், அவர்கள் 6 கிலோ கஞ்சாவை விற்பனைக்கு பதுக்கியது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து கஞ்சா விற்ற பாலக்கோடு வெள்ளிச்சந்தையை சேர்ந்த தமிழரசன் (25), பென்னாகரத்தை சேர்ந்த மணிகண்டன் (24) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து கஞ்சாவை கைப்பற்றினர். தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
கஞ்சா பதுக்கிய 2 பேர் கைது
previous post