தேன்கனிக்கோட்டை, ஜூன் 15: அஞ்செட்டி அருகே கோரிபாளையம் பகுதியில், போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அஞ்செட்டி பஸ் ஸ்டாப் பகுதியில், டிபன் கடை நடத்தி வரும் பழனிசாமி(40) என்பவரின் வீட்டில் ஒன்றரை கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. விசாரணையில் பழனிசாமி மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி மஞ்சுநாத்(22) ஆகியோர், கட்டிட தொழிலாளி மாதேஷ்(40) என்பவர் மூலமாக கஞ்சாவை வாங்கி, சிறிய பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, பழனிசாமி, மஞ்சுநாத் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மாதேஷை தேடி வருகிறார்கள்.
கஞ்சா பதுக்கிய 2 பேர் கைது
53
previous post