மேட்டூர், டிச.12: தொப்பூர் பிரிவு சாலையில் இருந்து மேச்சேரி வரும் சாலையில், கைகாட்டி வெள்ளாரில், மேச்சேரி போலீசார் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக டூவீலரில் வந்த நபரை நிறுத்தி, சோதனை செய்தனர். அப்போது அவர் 1.5 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரிய வந்தது. விசாரணையில், தர்மபுரி மாவட்டம், கம்மம்பட்டி கஸ்தூரி கோம்பையை சேர்ந்த வெங்கடாஜலம் மகன் கார்த்தி (28) என்பதும், தனியார் தொழிற்சாலையில் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வருவதும், ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து, மேச்சேரி சுற்றுவட்டார பகுதிகளில் விற்பனை செய்ய முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து கார்த்திக்கை கைது செய்து, கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய டூவீலரை பறிமுதல் செய்தனர். பின்னர், அவரை மேட்டூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
கஞ்சா கடத்திய வாலிபர் கைது
0
previous post