ஓலா நிறுவனம் ஓலா எஸ்1 மற்றும் எஸ்1 ஏர் என்ற இரண்டு வேரியண்ட்களை அறிமுகம் செய்துள்ளது. அதாவது, பேட்டரி திறன் குறைந்த ஸ்கூட்டர்களாக இவை வெளிவந்துள்ளன. எஸ்1ல் 2 கிலோவாட் அவர் பேட்டரியும், 8.5 கிவோவாட் மோட்டாரும் உள்ளது. ஷோரூம் விலையாக சுமார் ரூ.99,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மணிக்கு 90 கி.மீ வேகம் வரை செல்லும். ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 91 கி.மீ தூரம் செல்லலாம். எஸ்1 ஏர் ஏற்கெனவே 2.5 கிலோவாட் அவர் மற்றும் 4 கிலோவாட் அவர் பேட்டரிகளுடன் வந்தது. ஏற்கெனவே 2.5 கிலோவாட் அவர் பேட்டரி வேரியண்ட்டுக்கு முன்பதிவு செய்துள்ளவர்களுக்கு, கூடுதல் தொகையின்றி 3 கிலோவாட் அவர் பேட்டரியுடன் டெலிவரி செய்யப்படும். இதுதவிர புதிதாக 2 கிலோவாட் அவர் பேட்டரி கொண்ட வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டுளளது. ஒரு முறை சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 85 கி.மீ தூரம் வரை செல்லலாம். ஷோரூம் விலையாக சுமார் ரூ.84,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 3 கிலோவாட் அவர் கொண்டது ரூ.99,999 எனவும், 4 கிலோவாட் அவர் கொண்டது சுமார் ரூ.1,09,999 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது….