காவேரிப்பட்டணம், ஜூலை 3: கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் மத்திய ஒன்றிய திமுக சார்பில், ஓரணியில் தமிழ்நாடு பயிற்சி பாசறை கூட்டம் மற்றும் பூத் கமிட்டி, சமூக வலைத்தள பொறுப்பாளர்கள் ஆலோ சனை கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்எல்ஏ தலைமை தாங்கினார். காவேரிபட்டணம் மத்திய ஒன்றிய செயலாளர் தேங்காய் சுப்பிரமணி வரவேற்றார். கிருஷ்ணகிரி சட்டமன்றத் தொகுதி தேர்தல் பார்வையாளர் வழக்கறிஞர் தேவகுமார், மாவட்ட அவைத் தலைவர் நாகராஜ், மாவட்ட பொருளாளர் கதிரவன், மாவட்ட துணைச் செயலாளர்கள் கோவிந்தசாமி, சாவித்திரி கடலரசு மூர்த்தி, காவேரிப்பட்டணம் மேற்கு ஒன்றிய செயலாளர் சரவணன், காவேரிப்பட்டணம் பேரூராட்சி தலைவர் அம்சவேணி செந்தில்குமார், மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் அன்பரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில், ஒன்றிய துணை செயலாளர்கள் தமிழரசன், பரமசிவம், பொருளாளர் துரை பிரகாஷ், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் மணி விஜயன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சங்கர், சக்திவேல், சண்முகம், சசிகலா தசரா, சிவானந்தம், ஜெகதாப் கோவிந்தராஜ், முருகன், சிவப்பிரகாசம், அபி கவி கோவிந்தராஜ், லோகநாதன், நந்தன், மேகநாதன், சிவா, சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சட்டமன்ற தேர்தல், கட்சி பணிகள் குறித்து கருத்துக்கள் கூறப்பட்டது.