காவேரிப்பட்டணம், ஜூலை 2: காவேரிப்பட்டணத்தில், திமுக சார்பில் நடந்த பயிற்சி பாசறை கூட்டத்தில், மதியழகன் எம்எல்ஏ கலந்து கொண்டு ஆலோசனை வழங்கி பேசினார். காவேரிப்பட்டணத்தில், நகர திமுக சார்பில் ஓரணியில் தமிழ்நாடு பயிற்சி பாசறை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர பொறுப்பாளர் சாஜித் தலைமை வகித்தார். இதில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்எல்ஏ கலந்து கொண்டு பேசுகையில், ‘ஓரணியில் தமிழ்நாடு செயலி மூலம் திமுகவில் புதிய உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஏழை, எளிய மக்களுக்காக செயல்படுத்தும் அனைத்து திட்டங்களையும் வீடு, வீடாக சென்று எடுத்துக்கூறி புதிய உறுப்பினர் சேர்க்கையை தீவிரபடுத்த வேண்டும்.
இது சேர்க்கைக்கான பரப்புரை மட்டும் இல்லாமல், தமிழ்நாட்டு மக்களை மண், மொழி, மானம் காக்க ஒன்றிணைக்கும் ஒரு முன்னெடுப்பாக இருக்கும்,’ என்றார். நிகழ்ச்சியில், மாவட்ட அவைத் தலைவர் நாகராஜ், மாநில வர்த்தக அணி துணை செயலாளர் அன்பரசு, பொதுக்குழு உறுப்பினர் நாகராசன், கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதி தேர்தல் பார்வையாளர் வழக்கறிஞர் தேவகுமார், மாவட்ட துணைச் செயலாளர் கோவிந்தசாமி, காவேரிப்பட்டணம் பேரூராட்சி தலைவர் அம்சவேணி செந்தில்குமார் மற்றும் பேரூர் நிர்வாகிகள், வாக்குச்சாவடி டிஜிட்டல் முகவர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், பாக முகவர்கள், வார்டு உறுப்பினர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.