கெங்கவல்லி, ஜூலை 1: கெங்கவல்லி அருகே கிழக்கு மாவட்ட திமுக சார்பில், ஓரணியில் தமிழ்நாடு பயிற்சி பாசறை கூட்டத்தில் மாவட்ட செயலாளர் சிவலிங்கம் எம்.பி., பங்கேற்று பேசினார். கெங்கவல்லி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நடுவலூரில், திமுக சார்பில், ஓரணியில் தமிழ்நாடு பயிற்சி பாசறை கூட்டம் நடைபெற்றது. சேலம் கிழக்கு மாவட்ட துணை செயலாளர் சின்னதுரை, தொகுதி பொறுப்பாளர் ஆனந்த், ஒன்றிய செயலாளர் சித்தார்த்தன் தலைமை வகித்தனர். ஒன்றிய செயலாளர்கள் மணி, பாலமுருகன், அழகுவேல், பேரூர் செயலாளர் பாலமுருகன், வேல், முருகேசன், சண்முகம், சரவணன் உள்ளிட்டோர் முன்னிலை வைத்தனர். கிழக்கு மாவட்ட செயலாளர் சிவலிங்கம் எம.பி., சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.அப்போது, ஓரணியில் தமிழ்நாடு புதிய உறுப்பினர் சேர்க்கை ஜூலை 1ம் தேதி முதல் ஆகஸ்ட் 15ம் தேதி வரை தொடர்ந்து 45 நாட்கள் நடைபெறும். எனவே, கெங்கவல்லி தொகுதியில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட பூத் டிஜிட்டல் ஏஜென்ட், பாக முகவர்கள் புதிய உறுப்பினர் சேர்க்கை நடவடிக்கைகளை இணையதளத்தில் எவ்வாறு கையாள்வது என்பது குறித்து விளக்கம் பெற்று பணியில் முனைப்புடன் செயல்பட வேண்டுமென கேட்டுக்ெகாண்டார். நிகழ்ச்சியில் தொகுதி பாக முகவர்கள், பூத் டிஜிட்டல் ஏஜென்ட் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஓரணியில் தமிழ்நாடு பயிற்சி பாசறை கூட்டம்
0
previous post