அரூர், ஜூலை 4: பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் மண், மொழி, மானம் காத்திட ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தில், வீடு வீடாக சென்று புதிய உறுப்பினர் சேர்க்கை பணி தொடங்கியது. தர்மபுரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பழனியப்பன், இப்பணியை தொடங்கி வைத்தார். அவரது சொந்த கிராமமான மோளையானூரில் வீடு, வீடாக சென்று மண், மொழி, மானம் காத்திட, ஓரணியில் தமிழ்நாடு புதிய உறுப்பினர் சேர்க்கை தொடங்கி வைத்தார். இணையதளம் வழியாக குடும்ப உறுப்பினர்கள் பெயர்களை பதிவுசெய்து வழங்கினார். ஓரணியில் தமிழ்நாடு ஸ்டிக்கரை வீட்டின் முகப்பு பகுதியில் ஒட்டி விட்டு, உறுப்பினர் அட்டை வழங்கினார். நிகழ்ச்சியில் வாக்குச்சாவடி நிலை குழு முகவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மக்களுடன் ஸ்டாலின் செயலி மூலம் ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தில் மூலம் திமுக உறுப்பினராக பொதுமக்களை சேர்த்தனர். நிகழ்ச்சியில் சதிஷ், ஆனந்தபாபு மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
ஓரணியில் தமிழ்நாடு திமுக உறுப்பினர் சேர்க்கை
0
previous post