வில்லிபுத்தூர், ஜூலை 5: வில்லிபுத்தூர் நகரில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை துவங்கியுள்ளது.
வில்லிபுத்தூர் நகர் 13வது வார்டுக்கு உட்பட்ட பெரிய மாரியம்மன் கோயில் செக்கடி தெருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வில்லிபுத்தூர் தொகுதி பார்வையாளர் வர்த்தக அணி மாநில துணைச் செயலாளர் ராமர் கலந்துகொண்டு ஓரணியில் தமிழ்நாடு பிரச்சார இயக்கத்தை துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் தங்கம் ரவிக்கண்ணன், நகர செயலாளர் அய்யாவுப்பாண்டியன், ஒன்றிய செயலாளர் மல்லி ஆறுமுகம்,
நகர்மன்ற துணைத் தலைவர் செல்வமணி, பொதுக்குழு உறுப்பினர் சிவக்குமார், நகர் திமுக துணைச் செயலாளர் முத்துராமலிங்ககுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.