சிவகங்கை, செப். 4: சிவகங்கை அரண்மனைவாசல் முன்பு தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. ஓய்வூதியர்களுக்கு கட்டணமில்லா மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் சுசிலாதேவி, வட்ட செயலாளர் ஜோசப்இருதயம் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச்செயலாளர் பர்வதராஜன் போராட்டத்தை தொடங்கி வைத்தார். மாநில துணைத்தலைவர் வடிவேலு போராட்டத்தை முடித்து வைத்து பேசினார். மாவட்ட செயலாளர் முத்துசாமி, சண்முகவேல், முருகன், ஆறுமுகம், செல்வராஜ், கருப்பாயி, ஜோசப், பாஸ்கரன் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஓய்வூதியர் தர்ணா போராட்டம்
previous post