தர்மபுரி, செப்.1: தர்மபுரியில் தமிழ்நாடு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் 8வது மாவட்ட பேரவை கூட்டம் நேற்று அதியமான் அரசு பள்ளி வளாகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் தலைமை வகித்தார். துணை தலைவர் வரவேற்றார். அரசு ஊழியர் சங்க மாநில துணை தலைவர், மாநில துணை தலைவர் இளமாறன் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ₹7,850 வழங்க வேண்டும். 70 வயதான ஓய்வூதியர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சுருளிநாதன், குப்புசாமி, சுந்தரமூர்த்தி, பாஸ்கரன், சின்னராஜ், சேகர், பெருமாள், கேசவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஓய்வூதியர் சங்க பேரவை கூட்டம்
previous post