காரைக்குடி, மே 24: காரைக்குடி வட்ட ஓய்வூதியர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது. துணைத்தலைவர் செல்லத்துரை வரவேற்றார். தலைவர் அங்கமுத்து தலைமை வகித்தார். துணைத்தலைவர்கள் வாலறிவன், நிலவழகன், மாநில துணைத்தலைவர் திருஞானசம்பந்தம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். செயலாளர் மோகன்தாஸ் தீர்மானங்களை வாசித்தார். பொருளாளர் திருஞானசம்பந்தம் ஆண்டு வரவு, செலவு கணக்கு அறிக்கை சமர்ப்பித்தார். சோலையன் நன்றி கூறினார்.