சிங்கம்புணரி, மே 30: சிங்கம்புணரி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய தலைவர் இளங்கோ தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் பாண்டியராஜன், பொருளாளர் கற்பகவள்ளி முன்னிலை வகித்தனர்.
மாநில செயலாளர் பாண்டி, மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் முத்தழகு, மாவட்டத் தலைவர் பாண்டி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். இதில் ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைந்து உரிய தீர்வு காண வேண்டும். ஒன்றிய நிர்வாகத்தின் அலட்சிய போக்கை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் லதா, ஒன்றிய தலைவர் மலைச்சாமி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.