பேரையூர், ஜூலை 18: பேரையூர் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில், ஓய்வூதியர் சங்கத்தின் 5வது வட்ட கிளை மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு தலைவர் ராஜரத்தினம் தலைமை வகித்தார். துணை தலைவர் பெருமாள்சாமி முன்னிலை வகித்தார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 70 வயது நிரம்பியவர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம், ஈமக்கிரிகை தொகையாக ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசப்பட்டது.
சாப்டூர் – சந்தையூர் இணைப்பு சாலையில் வனத்துறை அடைத்து வைத்துள்ள பகுதியை திறந்து பஸ் வசதி செய்ய வேண்டும். இதேபோல் மள்ளப்புரம்-மயிலாடும்பாறை இணைப்பு சாலையை அகலப்படுத்தி பஸ் வசதி செய்ய வேண்டும். கிடப்பில் உள்ள டேரா பாறை அணைத்திட்டம், மொக்கத்தான் பாறை அணை திட்டம் உள்ளிட்டவைகளை உடனே துவங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.