விருதுநகர், மே 26: விருதுநகர் அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் தமிழ்நாடு ஓய்வூதியர்கள் பாதுகாப்பு இயக்க அமைப்புக் கூட்டம் மாவட்ட தலைவர் உலகநாதன் தலைமையில் மாவட்ட செயலாளர் செல்வின் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில இயக்க வழிகாட்டுதல் படி கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கைளை வலியுறுத்தி மே.29ல் பெருந்திரள் முறையீடு நடத்தவும், கலெக்டரை சந்தித்து மனு அளிக்கவும் முடிவுகள் செய்யப்பட்டது.