தர்மபுரி: தர்மபுரி கலெக்டர் அலுவலக அருகே, தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கம் சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் வரதன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கோவிந்தசாமி வரவேற்றார். மண்டல செயலாளர் ரத்தினவேலு கோரிக்கைளை விளக்கி பேசினார். 70 வயது முடிந்தோருக்கு 10 சதவீதம் கூடுதல் ஊதியம் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தினை மீண்டும் அமல்படுத்த வேண்டும். அங்கன்வாடி, சத்துணவு பணியாளர் மற்றும் உதவியாளர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக ₹7,850 வழங்க வேண்டும். குடும்ப பாதுகாப்பு நிதியை ₹50 ஆயிரத்தில் இருந்து ₹2 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். மருத்துவ காப்பிடு திட்டத்திலுள்ள குறைபாடுகளை நீக்கவேண்டும். மருத்துவப்படி ₹1000 மாதந்தோறும் வழங்க வேண்டும். தொகுப்பூதிய காலத்தை 12 வருடங்களாக குறைக்க வேண்டும். டிசம்பர் 17ம் தேதியை அரசு சார்பாக தேசிய ஓய்வூதியர் தினமாக கொண்டாடவேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மாவட்ட பொருளாளர் கிருஷ்ணன் நன்றி கூறினார். தொடர்ந்து சங்க நிர்வாகிகள், மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
previous post