சிவகங்கை, நவ.26: பொதுமக்கள் இ.சேவை மையம் அல்லது பொது சேவை மையங்கள் வாயிலாக மட்டுமே மாதாந்திர ஓய்வூதியத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:சிவகங்கை மாவட்டத்தில் வசிக்கும் பொதுமக்களில் முதியோர் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம், மாற்றுத்திறனாளி ஓய்வூதியம், கணவரால் கைவிடப்பட்டோர் ஓய்வூதியம் மற்றும் இதர ஓய்வூதியம் பெறத்தகுதியுடைய நபர்கள் தாங்கள் குடியிருக்கும் வட்டத்தில் உள்ள தாசில்தார் அலுவலக “இ” சேவை மையம் மற்றும் பொது சேவை மையங்களில் இணைய வழி வாயிலாக மட்டுமே விண்ணப்ப மனுக்களை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யும் பொழுது குடும்ப அட்டை, ஆதார் அட்டை, புகைப்படம், வங்கி கணக்குப் புத்தகம் மற்றும் வறுமைக்கோட்டு பட்டியல் எண் ஆகியவற்றுடன் பதிவு செய்ய வேண்டும். மாற்றுத்திறனாளியாக இருந்தால் அடையாள அட்டை நகலுடன் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓய்வூதியம் பெறுவதற்கு சேவை மையம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கலாம்
0