மல்லசமுத்திரம், ஜூலை 1: மல்லசமுத்திரம் காவல் நிலையத்தில் எஸ்ஐயாக பணியாற்றியவர் முருகேசன்(60). இவர் நேற்று பணி ஓய்வு பெற்றார். முன்னதாக நாமக்கல் மாவட்ட எஸ்பி ராஜேஷ்கண்ணாவை நேரில் சென்று சந்தித்து வாழ்த்து பெற்றார். தொடர்ந்து காவல் நிலையத்தில் திருச்செங்கோடு டிஎஸ்பி கிருஷ்ணன் தலைமையில் பிரிவு உபசார விழா நடந்தது. எலச்சிபாளையம் இன்ஸ்பெக்டர் ராதா முன்னிலை வகித்தார். மல்லசமுத்திரம் எஸ்ஐ ரஞ்சித்குமார், தனிபிரிவு எஸ்ஐ சக்திவேல் ஆகியோர் ஓய்வு எஸ்ஐ முருகேசனுக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டினர்.
ஓய்வு பெற்ற எஸ்ஐக்கு பணிநிறைவு பாராட்டு
0
previous post