தேனி : தேனி மாவட்ட ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க கூட்டம் தேனியில் நடந்தது. தேனியில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க அலுவலகத்தில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் சின்னச்சாமி தலைமை வகித்தார். பவானந்தம் வரவேற்றார்.
இதில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க மாநிலத் துலைவர் பாலசுப்பிரமணியன் சிறப்புரையாற்றினர். மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட பொருளாளர் ஆறுமுகம், சத்துணவு ஓய்வூதியர் சங்க மாநில துணைத் தலைவர் அன்பழகன், ஈஸ்வரன், கருப்பையா, அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் உடையாளி, முன்னாள் அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பேசினர்.